உள்நாடு

நான்கு இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினர் மீன்பிடி படகை சோதனை செய்து, அதில் இருந்த நான்கு இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

மீன்பிடி படகையும் நான்கு இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக இந்தக் குழு யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

ஐந்து மாவட்டங்களுக்கு கடும் மழை

உள்ளூர் பெரிய வெங்காயத்திற்கு கட்டுப்பாட்டு விலை