அரசியல்உள்நாடு

நான்கு அமைச்சு செயலாளர்களின் நியமனங்கள் – பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அனுமதி

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் (09) அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய, வலுசக்தி அமைச்சின் செயலாளராக பேராசிரியர் கே.ரீ.எம். உதயங்க ஹேமபாலவின் நியமனம், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளராக கே.எம்.ஜி.எஸ்.என். களுவெவவின் நியமனம், தொழில் அமைச்சின் செயலாளராக எஸ்.எம். பியதிஸ்ஸவின் நியமனம் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளராக கே.டீ.ஆர். ஒல்காவின் நியமனம் ஆகிய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

Related posts

பிரபஞ்சம் 321 ஆவது கட்ட நிகழ்வில் ரிஷாத் பதியுதீனும் செல்வம் அடைக்கலநாதனும் பங்கேற்பு.

நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி விசேட உரை

ஜே.ஆரின் பேரன் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.