உலகம்

நான்காவது தடுப்பூசிக்கு இஸ்ரேல் தயார்

(UTV | இஸ்ரேல்) –  ஒமிக்ரோன் பரவலை அடுத்து இஸ்ரேல் நான்காவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதன்படி கொரோனாவுக்கு எதிராக நான்காவது தடுப்பூசியை செலுத்தும் முதல் நாடாக இஸ்ரேல் கருதப்படும்

இந்த நான்காவது தடுப்பூசி, முன்னிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் 60வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று தொற்று நோய் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கபட்ட முதல் பொதுமகன் உயிரிழந்ததை அடுத்தே இஸ்ரேல் நான்காவது தடுப்பூசியை ஆரம்பிக்கவுள்ளது.

இதுவரை இஸ்ரேலில் 340 பேர் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

 

Related posts

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிப்பு

மியான்மர் நிலநடுக்கம் குறித்து அமெரிக்கா தகவல்

editor

Molnupiravir : பிரிட்டன் அரசு பச்சைக் கொடி