உள்நாடு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி!

(UTV | கொழும்பு) –

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டி இதுவென்பது சிறப்பம்சமாகும். இதற்கு முன்னர் 07 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள தமது அணி பலம்வாய்ந்த இலங்கைக்கு எதிராக கடுமையான போட்டியை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனாவிடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள்

அக்கரைப்பற்றில் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.!

editor

பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைப்பு!

editor