உலகம்

நாட்டை விட்டு வெளியேறும் ஸ்பெயின் முன்னாள் மன்னர்

(UTV|ஸ்பெயின் ) – ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லஸ் (Juan Carlos), நாட்டை விட்டு வௌியேறுவதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சவுதி அரேபியாவுடனான விரைவு ரயில் போக்குவரத்து திட்டத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து முன்னாள் மன்னர் ஜூவான் கார்லஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஸ்பெயின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் திடீரென நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

editor

அடங்கினார் இளவரசர் சார்லஸ்

ஈராக் மருத்துவமனையில் தீ விபத்தில் 60 பேர் பலி