நிவாரண நிதியத்துக்கு Re build srilanka இதுவரை ரூ. 3,421 மில்லியன் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த துறைகள் மற்றும் மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பொருட்டு இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.
செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளதாவது; உள்ளூர் வர்த்தகத் தலைவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த உதவிகளை வழங்கியுள்ளன.
இதன்பிரகாரம் இந்நிதியத்துக்கு இதுவரை 3,421மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.இது 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும்.
வெளிநாட்டு நாணயங்களாக 4.1 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது.
நாற்பது நாடுகளிலிருந்து நிதி உதவி பெறப்பட்டுள்ளதாகவும், அதில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
