உள்நாடு

நாட்டில் ரெபிட் என்டிஜென் கருவிகளுக்கு பற்றாக்குறை

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக என்டிஜென் கட்டளைகளில் பற்றாக்குறை நிலவுவதால் கொவிட் நோயாளிகளைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மருந்து விநியோகப் பிரிவினால் வைத்தியசாலைகளுக்கு உத்தரவிடப்பட்ட உடனடி ரெபிட் என்டிஜென் பரிசோதனை கருவிகள் வழங்கப்படாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, அம்பாறை, கராப்பிட்டி, பேராதனை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் உடனடி ரெபிட் என்டிஜென் பரிசோதனைகளை நிறுத்த வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உடனடி ரெபிட் என்டிஜென் பரிசோதனைகள் இல்லாததை பிசிஆர் மூலம் மறைக்க முடியும் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Related posts

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப் பட்டாசு

editor

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

editor

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]