அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

” நாட்டில் புற்றுநோய் போன்று பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கவேண்டும்” – ஞானசார தேரர்

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு உண்மையான நீதியை வழங்கவேண்டும் என்றால் நாட்டில் புற்றுநோய் போன்று பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை முற்றாக தோற்கடிக்கவேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கம் அவ்வறான திட்டம் எதனையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக பல மேடைகளில் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும்,இதுவரை அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பயங்கரவாதத்துடன் 1990 முதல் தொடர்புகளை பேணிவந்த குழுக்கள் -இதற்காக பயிற்சி எடுத்தவர்கள்,இந்த நோக்கத்திற்காக இளைஞர்களை வெளிநாட்டிற்கு அனுப்பியவர்கள் என அனைவரும்,வெட்கமற்று இந்த அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்துள்ளனர் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் 11ம் திகதி உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சூத்திரதாரி குறித்த விபரங்களை வெளியிடுவேன் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார், என குறிப்பிட்டுள்ள ஞானசார தேரர்,இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள், எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நுவரேலியாவில் ஆற்றிய உரைகளில் ஜனாதிபதி நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை என குறிப்பிட்டிருந்தார் என தெரிவித்துள்ள பொதுபலசேனாவின் பொது செயலாளர் ஜனாதிபதி இனவாதம் என குறிப்பிடுவது எதனை ஜனாதிபதி இனவாதம் மற்றும் மதஅடையாளம் குறித்து தெளிவுபடுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உயிர்த்தஞாயிறுதாக்குதலை அரசியல்மயப்படுத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள ஞானசார தேரர் உயிர்த்த ஞாயிறுதாக்குதலை அரசியல்மயப்படுத்தினால் அது உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்கு உதவலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 44 ஆயிரம் பேர் கைது

இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு கட்சியில் இடமில்லை