உள்நாடு

நாட்டில் இன்றும் மின்வெட்டுக்கு சாத்தியம்

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று(07) மின்சாரத் தேவை 2750 மெகா வோட்டை எட்டினால் மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும்போது சுமார் 2750 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என தெரிவித்தார்.

மின் வெட்டு தொடர்பான தீர்மானங்களை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவே எடுக்க வேண்டுமே தவிர மின் பொறியியலாளர்கள் எடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு இன்னமும் மர்மமாகவே இருப்பதாகவும், மின்வெட்டுக்கான காரணம் குறித்து இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளருக்குக்கூட தெரியவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

Related posts

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த நிசாம் காரியப்பர்

editor

கனமழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் புதிய எச்சரிக்கை

editor

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது