உலகம்

நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் பிரான்ஸ் தடை

(UTV |  பிரான்ஸ்) – பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒரு மாத காலத்திற்கு முடக்கல் நிலையை அமுல்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அங்கு கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டிருப்பதாக அந்த நாட்டு பிரதமர் ஜியேன் கெஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாரிஸ் மாத்திரமின்றி மேலும் 15 மாநிலங்களிலும் இன்று நள்ளிரவு முதல் முடக்கல் நிலை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது முன்னர் போன்று கட்டுப்பாடுகள் வலுவாக காணப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் தொடரும் எனவும் மக்கள் வீடுகளில் இருந்து 10 கிலாமீற்றருக்குள் உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்காக வெளியில் வர முடியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர காரணங்கள் தவிர்ந்து நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவத்திடம் மண்டியிட்ட கன்னியாஸ்திரி

PakVac தடுப்பூசியின் செயல்திறனில் முனேற்றம்

ரஷ்யாவின் மொஸ்கோ நகர முடக்கம் தளர்த்தப்பட்டது