உள்நாடு

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு பரவுவதற்கான சாத்தியம்

(UTV|கொழும்பு)- நாட்டில் மழையுடனான வானிலை நிலவுவதால், டெங்கு காய்ச்சல் மேலும் அதிகரிக்க கூடும் என டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகரிக்கலாம் என டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 19,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது

Related posts

புதிய அரசாங்கத் திட்டங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு

editor

வில்பத்து வழக்கு: ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 81,220 பேர் கைது