சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றைய தினம் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் ஏனைய பிரதேசங்களில் விசேடமாக மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படுவதோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கிளிநொச்சியில் கொள்ளையர்களின் அட்டகாசம் மக்கள் பீதியில்

இலங்கைக்கு ஷரிஆ பல்கலைக்கழகங்கள் அவசியம் இல்லை-பிரதமர்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை