சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO)-இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல், வடமத்திய, மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 150 மி.மீ அளவான மிகவும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-20 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மகிந்த தரப்பினர் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனை ஆரம்பம்

இனவாதிகளால் கொல்லப்பட்ட பெளசுல் அமீன் குடும்பத்திற்கு வீடு!

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்