சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில்  இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, அனுராதபுரம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்-ஜனாதிபதி

உலக தபால் தின முத்திரை கண்காட்சி கண்டியில்…

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை