சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

(UTVNEWS|COLOMBO) – மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

சஹ்ரான் ஹசீமுடன் நுவரெலிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றுமோர் நபர் கைது

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு

தற்போதைய நிலைமையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor