சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பமான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதன்படி,திருகோணமலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி , மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வடமத்திய மாகாணங்களிலும் அதிகரித்த வெப்பம் நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

JUST NOW: நாட்டுக்கு வருகைதந்த பசில் – நடக்கப்போவதென்ன?

இன்று 10 மணிநேர நீர் விநியோகத்தடை

அமெரிக்கா குடியுரிமையை முற்றாக இரத்து செய்தேன் – கோட்டாபய