வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நேற்று (07) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆற்றுப் படுக்கைகளை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்புக்கு அமைய, ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைந்துள்ள ஆற்று நீரேந்துப் பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்பதால் இந்த வெள்ள அபாய நிலை உருவாகலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, குறித்த மாவட்டங்களில் உள்ள ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளிலும், நதிக்கரைகளிலும் வசிக்கும் மக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
