உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீ. மழை வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

Related posts

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

editor

ஹெரோயினுடன் இருவர் கைது

இலங்கையில் ஏற்படும் 70 சதவீத மரணத்திற்கான காரணத்தை வெளியிட்ட சுகாதார அமைச்சு

editor