உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பதிவாகும்.

அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவது பிரதானிகளின் பொறுப்பு

அரசாங்க மருத்துவமனைகளில் கடுமையான மருந்துப் பொருள் தட்டுப்பாடு!

புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடலாமைகள்