வகைப்படுத்தப்படாத

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சம்பரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தின் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மழை பெய்யும் போது நாட்டை சுழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 80 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும் என  காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Three faculties at Ruhuna Uni. to be reopened tomorrow

பிரான்ஸ் ஜனாதிபதியால் புதிய பிரதமர் அறிவிப்பு

ලංකාවේ දිනකට පුද්ගලයින් 245ක් බෝ නොවන රෝග හේතුවෙන් මියයයි