புகைப்படங்கள்

நாடெங்கிலும் சீரற்ற காலநிலை

(UTV|கொழும்பு) – மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, பெய்துவரும் கடும் மழை காரணமாக கேகாலை-அவிசாவளை வீதியின் கொடியாகும்புர பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

Related posts

MT New Diamond : 72 மணித்தியால தீயணைப்பின் பின்னர்

எல்ல காட்டுப் பகுதியில் தீப் பரவல்

தீவிரமடையும் கலிபோர்னியா காட்டுத்தீ