சூடான செய்திகள் 1

நாடு முழுவதும் தொடரூந்து ஊடான பொதி பரிமாற்று சேவை பாதிப்பு

(UTV|COLOMBO)-தொடரூந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக, நாடு முழுவதும் தொடரூந்து ஊடான பொதி பரிமாற்று சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதிப்பரிமாற்றல் நடவடிக்கையின் போது நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு புறம்பாக தொடரூந்து நிலைய அதிபர்கள் செயற்பட்டமையால், இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

2 வருடங்களாக நிலவிய இந்த முரண்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்த போதும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் சுமார் 4000 ஆயிரத்துக்கும் அதிகமான பொதிகள் தொடரூந்து  நிலையங்களில் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

 

 

Related posts

மூன்று மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமான ஸ்ரீலங்கன் விமான சேவை

கஞ்சிப்பானை இம்ரானை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை