உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு முழுவதும் திடீர் மின் தடை – காரணம் வௌியானது

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையால், தேசிய மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுடன் இணைந்து நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஊழியர்கள் செயற்பட்டு வருவதாகவும், திடீரென ஏற்பட்ட மின்வெட்டுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இடிந்து விழுந்த சுவர் – பாடசாலை மாணவி மரணம்

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான தீர்மானம்

கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்