உள்நாடு

நாடு முழுவதும் இளம் தொழில்முனைவோரை உருவாக்க ஆயிரம் உற்பத்தி கூட்டுறவுகள் நிலையங்கள்!

நாடு முழுவதும் இளம் தொழில்முனைவோர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில், ஆயிரம் உற்பத்தி கூட்டுறவுகளை நிலையங்களை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கூட்டுறவுத்துறைகள் அபிவிருத்தி செய்வது குறித்து வர்த்தக, வணிக மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சு மாகாண மட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி,
நடாத்தி வருகின்றது.

அதன்படி சபரகமுவ மாகாண விழிப்புணர்வு நிகழ்ச்சி சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் வர்த்தக, வணிக மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் (08) இரத்தினபுரியில் உள்ள கேதுமதி மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டுறவுத்துறையை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியாக ஒருங்கிணைப்பதே தனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் பட்ஜெட் திட்டங்களை முன்வைத்திருந்தார்.

அதன்படி அதற்கான தற்போது திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மாகாண, மாவட்ட மற்றும் பிராந்திய மற்றும் கிராமப்புற மட்டங்களில் உற்பத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டில் வேலையின்மையைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர் சமூகத்தை மையமாகக் கொண்டு, தொழில்முனைவோரை கிராமப்புற மட்டத்திற்கு கொண்டு வருவதற்காக கூட்டுறவு இயக்கம் இதில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் ஆயிரம் கூட்டுறவு நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கு 200, 2026 ஆம் ஆண்டுக்கு 400 மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கு 400 என இந்த உற்பத்தி கூட்டுறவு நிலையங்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மேற்படி நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் இ.ஏ.கே. சுனிதா, பிரதான அமைச்சின் செயலாளர் சுஜீவா போதிமன்ன, மாகாண கூட்டுறவு அபிவிருத்திதுறை ஆணையர் நிஷாந்த சமன் குமார உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

பொது மக்கள் நிவாரண தினம் தற்காலிமாக இரத்து

மோட்டார் வாகனங்கள் வைத்திருப்போருக்கான அறிவித்தல்

ஜனாதிபதி தலைமையில் இலங்கை முதலீட்டு மாநாடு ஆரம்பம்