உள்நாடு

நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்று (21) இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

25 ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கு தளர்த்தப்படும் பயணக்கட்டுப்பாடு அன்றைய தினம் இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனையோர் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் தற்போது COVID நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை கருதியே பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில்

என் உயிருக்கு என்ன அச்சுறுத்தல் வந்தாலும் நான் தயங்க மாட்டேன் – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்

editor

பொறுமைக்கும் எல்லை உண்டு என்கிறார் நாமல் எம்.பி

editor