உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்றும் (23) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, A முதல் L வரையிலான பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், P முதல் W வரையிலான பிரிவுகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 1 மணி நேர மின் வெட்டும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடமும் மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்வெட்டு அட்டவணை

Related posts

இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட வாகன உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது – தேசிய கணக்காய்வு அலுவலகம்

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக உயர்வு

இதுவரை 20,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகள்