அரசியல்உள்நாடு

நல்ல தேசத்தை கட்டியெழுப்புவதே ஜனாதிபதி அநுரவின் நோக்கம் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

ஜனாதிபதியின் எண்ணக் கருவின் கீழ் செயற்படுத்தப்படும் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் மூலம் இந்த மாணவ மனப்பான்மை விருத்தி வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் Clean Sri Lanka திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து அரசாங்கப் பாடசாலைகளையும் மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படும் NEXTGEN LEADRS வேலைத்திட்டத்தின் சப்ரகமுவ மாகாண ஆரம்ப நிகழ்வு இன்றையதினம் (29) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இரத்தினபுரி வித்யாராஜ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றையதினம் (29) நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் இரத்தினபுரி கல்வி வலயத்தைச் சேர்ந்த எட்டுப் பாடசாலைகளிலிருந்து சுமார் நூறு (100) மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Clean Sri Lanka மூலம் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதுடன், இதன் மூலம் பாடசாலைச் சிறார்களின் மனப்பான்மை (ஆக்கப்பூர்வமான நடத்தை) விருத்தியை எதிர்பார்க்கப்படுகிறது.

இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் சிங்கள மொழி மூலம் எட்டு நிகழ்ச்சிகளும், தமிழ் மொழி மூலம் மூன்று நிகழ்ச்சிகளும் செயற்படுத்த சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி மேற்படி மாகாணத்தில் உள்ள ஆயிரம் (1000) மாணவர்கள் இதன் மூலம் அறிவூட்டப்படுவார்கள்.

இவ்வாறு அறிவூட்டப்பட்ட மாணவர்கள் மூலம் முழுப் பாடசாலைக் கட்டமைப்பில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அறிவூட்டுவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன,

சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்காக ஒருவருக்கொருவர் மதிக்கும், பெண்களுக்கு மரியாதை அளிக்கும், ஆளுமை கொண்ட பிரஜைகள் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்.

அதற்காக ஜனாதிபதி செயலகம், சப்ரகமுவ மாகாண சபை, கல்வித் திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை சப்ரகமுவவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் திருமதி சம்பா ஜானகி ராஜரத்ன மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுணுஆரச்சி, மாகாண கல்விப் பணிப்பாளர் புஷ்பகுமார டயஸ், மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர் (திட்டமிடல்) நெவில் குமாரகே, இரத்தினபுரி வலயக் கல்விப் பணிப்பாளர் நிலாந்தி தயானந்த மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

மனைவி, காதலி மற்றும் நண்பர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோத சொத்து – நிமால் சிறிபால டி சில்வா மீது முறைப்பாடு

editor

அரசாங்கம் உறக்கத்தில் முட்டாள்தனமாக பேசி வருகிறது – சஜித் பிரேமதாச

editor

இன்றைய தினம் நால்வருக்கு கொரோனா