உள்நாடுபிராந்தியம்

நற்பிட்டிமுனை நூலகத்தில்சிறுவர் தின நிகழ்வு!

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் வாசிப்பு மாதம் என்பவற்றை முன்னிட்டு கல்முனை மாநகர சபையின் கீழுள்ள நற்பிட்டிமுனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் சிறப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களின் ஆலோசனையின் பேரில் நூலகர் ஏ.எச். தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா முன்பள்ளிப் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இவர்களுக்கு நூலக செயற்பாடுகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும் விபரிக்கப்பட்டது.

மேலும், இச்சிறார்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் அவர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் இனிப்புப் பண்டங்களும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Related posts

நுரைச்சோலையில் பழுதடைந்த ஜெனரேட்டர் திங்கள் முதல் வழமைக்கு

குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண திருத்தம் இன்று முதல் அமுலுக்கு

இன்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்