கேளிக்கை

நயனின் மூக்குத்தி அம்மன்

(UTV | இந்தியா) – தமிழ் திரைப்படங்கள் பல ஓடிடிக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து தயாராகியுள்ள படம் மூக்குத்தி அம்மன். காமெடி டிராமா ரக படமான இதற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல திரைப்படங்கள் ஓடிடிக்கு விற்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தையும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடிக்கு விற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஆர்ஜே பாலாஜி ஐபிஎல் வர்ணனையாளர் பணியில் பிஸியாக இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிடும் திட்டம் உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Related posts

டாப்ஸி ரகசிய நிச்சயதார்த்தம்?

அரசியல்வாதியாக சூர்யா?

கொழும்பு சூதாட்ட நிலையத்தில் நடனமாடும் நமீதா