(UTV|COLOMBO)-இஸ்லாமியர்கள் இன்று மீலாதுன் நபி விழாவை கொண்டாடுகின்றனர்.
தேசிய மீலாதுன் நிகழ்வை முன்னிட்டு சகல இஸ்லாமியர்களும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு சமூக, கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்ற போதிலும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
இது சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதுடன், பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளதுதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
