வகைப்படுத்தப்படாத

நந்திக்கடலில் மீன்கள் இறப்பு : நாரா நிறுவனம் ஆய்வு

(UDHAYAM, COLOMBO) – முல்லைத்தீவு நந்திக்கடல் வட்டுவாகல் களப்பில் மீன்கள் இறப்பதற்கான காரணத்தை நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நந்திக்கடல் வட்டுவாகல் களப்பில் நீரின் வெப்பம் அதிகரித்தது மற்றும் ஒட்சிஜன் அளவும் குறைந்தமையே காரணம் என அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி நிரோசன் விக்கிரமஆராய்ச்சி தெரிவித்தார்.

கடந்த வாரத்தின் இந்த கடல் களப்பு பகுதியில் பெருமளவு மீன்கள் இறந்தது தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டது.

கடந்த வாரத்தில் நந்திக்கடல் பகுதியில் ஓரளவு மழைவீழ்ச்சி இடம்பெற்றமை காரணமாகவும் மீன்கள் இறந்திருக்க கூடும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

டெங்கு தொற்றால் பதுளை மாணவன் மரணம்

Anjalika takes on Tania in Under 18 final

Court rejects NPC Secretary’s anticipatory bail application