அரசியல்உள்நாடு

நண்பர்களுக்கு அரச காணிகளை வழங்கியதாக சமல் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ எந்த அடிப்படையும் இல்லாமல் அரசியல் நண்பர்களுக்கு ஏக்கர் கணக்கில் மகாவலி நிலங்களை வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குற்றம் சாட்டினார்.

எம்பிலிப்பிட்டியவில் உள்ள வளவே வலயத்தில் உள்ள மகாவலி நிலங்கள் எந்தவொரு சாத்தியக்கூறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

வளவே வலயத்தில் மகாவலி நிலங்களை வழங்கும் செயல்முறையை மறுபரிசீலனை செய்யுமாறும், எந்தவொரு உற்பத்தி பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படாத நிலங்களை கையகப்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“இந்த நிலங்கள் உண்மையில் விவசாயம் செய்பவர்களுக்கு அல்லது சாத்தியமான திட்டங்களைத் தொடங்க நம்பிக்கை கொண்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதேவேளை சில நிலங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய காணி மற்றும் நீர்ப்பாசனத் துறை பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க, குறிப்பிட்ட நிலங்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்தால், விசாரணைகளை ஆரம்பிக்கலாம் என்றார்.

Related posts

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1000 உறுதி

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,309 பேர் கைது