இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ராதிகா.
நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என்ற பன்முக அடையாளங்கள் கொண்டவர் ராதிகா. தனது தனித்துவமான நடிப்பு திறன் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடிகை ராதிகா நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராதிகா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெங்கு காய்ச்சல் காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு 5 நாட்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் எனவும் பின்னர் வீடு திரும்புவார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.