சூடான செய்திகள் 1

நடிகர் ரயன் வேன் ரோயனின் சகோதரர் விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு

(UTV|COLOMBO) பாதாள உலக தலைவனான மாகந்துர மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரயன் வேன் ரோயனின் சகோதரரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நேற்று(07) இரவு நடிகர் ரயன் வேன் ரோயனின் தெஹிவளையில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், வீட்டில் இருந்து இலத்திரனியல் தராசு ஒன்றும் வீட்டில் இரகசிய துளை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவ்வேளை, விசாரணைகளுக்காக ரயன் வேன் ரோயனின் சகோதரர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்று(07) கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

200 கிலோ ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது

அமைச்சர் வடிவேல் சுரேஷ் தனது பதவியை இராஜினாமா செய்தார்

ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்