கேளிக்கை

நடிகர் மற்றும் வைத்தியர் சேதுராமன் காலமானார்

(UTV|இந்தியா ) – கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த நடிகரும் வைத்தியருமான சேதுராமன் காலமானார்.

தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சேதுராமன். இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர்.

இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சேது ராமன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

கேன்ஸ் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான்

விரைவில் திரிஷாவின் பலமுகங்கள்

பிரமாண்டமான ஆக்‌ஷன் படத்தில் இணைந்த WWE புகழ் ஜான் ஸீனா!