உள்நாடு

நகர சபை முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) -நாவலபிடிய நகர சபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்காக இவர்களுக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கினிகத்தேன-நாவலபிடிய வீதியில் உள்ள ஒரு விடுதியொன்றிற்குள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (30) கைது செய்யப்பட்டிருந்தனர்

இவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது

editor

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதி திங்களன்று அறிவிக்கப்படும்

பிரிட்டனின் இணையனுசரணை நாடுகளுடனான சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்பு!