உள்நாடு

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களுக்கு பிணை

நகர அபிவிருத்தி அதிகார சபையின் இரண்டு முன்னாள் பணிப்பாளர்கள் இன்று (11) கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணிகளுக்கான முன்னாள் பணிப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்வைத்த காரணிகளை கருத்திற்கொண்டு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம அவர்களை பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மெண்டி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பொதுத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

editor

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு