காலியில் ஹிக்கடுவை, தொடந்துவ மீன்பிடி துறைமுகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்த மீனவர் ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயன்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (31) இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தொடந்துவ மீன்பிடி துறைமுகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்த மீனவர் ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதன்போது துப்பாக்கிதாரிகளிடம் இருந்த துப்பாக்கி செயலிழந்துள்ளதால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பணத்தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சி இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.