உள்நாடுபிராந்தியம்

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, வாலனை கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், ஆனால் துப்பாக்கி செயல்படாததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாணந்துறை பகுதியில் இயங்கும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

IMF பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]