உள்நாடு

தோட்டத் தொழிலாளர் சம்பளத்தை ரூ. 2,000 ஆக அதிகரிக்கவும் – ஹட்டனில் துண்டுப்பிரசுர போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 2000 ரூபாவாக உயர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட துண்டுப் பிரசுரங்கள் நேற்று (31) ஹட்டனில் விநியோகிகப்பட்டுள்ளன.

தோட்டத் தொழிலாளர் மையம், ​சமூக நீதிக்கான மலையக மக்கள் இயக்கம் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களால் இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 2000 ரூபாவாக அதிகரித்தல், தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்குதல், லயன் அறைகளுக்குப் பதிலாக நிலம் வழங்குதல், தோட்ட அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் குடியுரிமை வழங்குதல், சிவில் விவகாரங்களுக்கு இடையூறாக இருக்கும் தோட்ட அதிகாரிகளின் அதிகாரத்தை ஒழித்தல், பகல் நேர பராமரிப்பு மைய வசதிகளை விரிவுபடுத்துதல், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்குத் தீர்வுகளை வழங்குதல், உயர்தர அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கான தமிழ் மொழி கல்வி முறையை விரிவுபடுத்துதல், மலையக மக்களைத் தேசிய சமூகத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வது போன்ற பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம் “டயானா கமகே

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு (UPDATE)

சனத் நிஷாந்தவின் மரணம் – முக்கிய தகவலை வெளியிட்ட சாரதி