உள்நாடு

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1000 உறுதி

(UTV | கொழும்பு) – எதிர்வரும் மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தேயிலை தொழிற்துறையின் தரத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, தற்போது நடைமுறையில் உள்ள வரி விலக்கு, உர மானியம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் அதில் உள்ளடங்கும்.

இந்த நிவாரணங்கள் பெருந்தோட்ட கம்பனிகளுக்கே கிடைப்பதால் அதன் நன்மைகளை தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

21 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு – பூகொட OIC விளக்கமறியலில்

இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது – சர்வதேச நாணய நிதியம்

editor

இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் புதிய தலைவர் நுஷாட் பெரேரா