சூடான செய்திகள் 1

தொழில் நுட்ப மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன – மீண்டு கல்வி நடவடிக்கை 29ல்ஆரம்பம்…

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் பின்வரும் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள் உடனடியாக மூடப்படுவதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை 29 ஆம் திகதி அன்று மீண்டும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக அவற்றை திறக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார்.

1- இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை

2- தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை

3- வரையறுக்கப்பட்ட திறன்கள் அபிவிருத்தி நிலையம்

4- இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம்

5- தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்துடன் இணைந்த நிறுவனங்கள்

6- தொழில்சார் ,தொழில் நுட்ப பல்கலை கழகம்

7- இலங்கை அச்சக நிறுவகம்

8- கடல்சார் பல்கலை கழகம்

9- தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவகம்

10- இயந்திரவியல் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம்

11- தொழில் நுட்ப கல்லூரிகள்

என்பவற்றுடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழான இலங்கை புடவைக்கைத்தொழில் நிறுவகம் ஆகியவையே மூடப்படுகின்றன.

 

 

 

 

Related posts

கல்முனையில் உடன் ஊரடங்கு சட்டம் அமுலில்

“ராவண் 1” செய்மதி திங்கட்கிழமை பூமியின் சுற்றுவட்டப்பாதையில்!!

குளியாப்பிட்டிய கட்சி கூட்டம்: UNP நவீன் அதிருப்தி