தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்ட TK733 எனும் துருக்கி விமானம், இன்று (17) மாலை மீண்டும் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
இது தொடர்பாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த விமானம் 51 பயணிகளுடன் மாலை 5.41 மணியளவில் இலங்கையிலிருந்து புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (16) கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாதுகாப்பு கருதி மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டது.
அச்சமயம் அந்த விமானத்தில் 202 பயணிகளும் 10 பணியாளர்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
