உள்நாடு

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கு தடுப்பூசியேற்றல் நாளை

(UTV | கொழும்பு) –  வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு தடுப்பூசியேற்றல் நாளை (07) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.

தடுப்பூசி ஏற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவு இராணுவ தாக்குதல் சம்பவம் – ஹர்த்தாலுக்கு ஜீவன் தொண்டமான் எம்.பி முழுமையான ஆதரவு!

editor

“கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வௌிநாடு செல்லத் தடை” ……!!

உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை – பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன்

editor