உள்நாடு

தொழிலதிபர் கொலை சிறுவன் உட்பட இரு சகோதர்ரகள் கைது!

மாரவில, கட்டுனேரி பகுதியில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரைக் கொலை செய்து, சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்துக்கு அண்மித்தாகவுள்ள வடிகானில் உடலை மறைத்து வைத்ததற்காக பிரதான சந்தேக நபர் உட்பட இரண்டு சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோடீஸ்வர தொழிலதிபரை கொலை செய்து 2.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள அவரது கெப் வானத்தைக் கொள்ளையிட்ட முக்கிய சந்தேக நபர் 19 வயது மெக்கானிக் ஆவார், அதே நேரத்தில் 15 வயது தம்பி, மாரவிலவில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை ஒன்றில் பயின்று வருகிறார்.

கோடீஸ்வர தொழிலதிபரின் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் 20 வயது இளைஞனை விசாரித்ததன் மூலம் தெரிய வந்த தகவல்களின் அடிப்படையில், சகோதரனும் சிறுவனும் பாடசாலை மாணவனும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தப்பட்ட கெப் வாகனம் வென்னப்புவவின் உடசிறிகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,

கொலை செய்யப்பட்டவர் 32 வயது திருமணமாகாத கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார்.

Related posts

கடந்த வருடத்தை விட இந்த வருடம் ரயில் விபத்துக்கள் அதிகரிப்பு

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள இன்றும் நீண்ட வரிசை.

editor

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதி

editor