உள்நாடு

தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம் – ஒருவர் பலி – 19 பேர் காயம்

திவுலப்பிட்டிய – படல்கம பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் தொழிற்சாலையின் மேலும் 19 ஊழியர்கள் காயமடைந்து அகரகம மற்றும் திவுலபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிரியுல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மற்றுமொரு ஆசிரியர் குழுவுக்கு ரூ.5000 கொடுப்பனவு

முக கவசத்திற்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

IDH இல் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு