உள்நாடு

தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

(UTV | கொழும்பு) – அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பிற்கு சொந்தமான 17 தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள முரண்பாடு, பதவி உயர்வில் காணப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அவர்கள் இந்த சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம், அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம், உள்நாட்டு இறைவரி தொழிற்சங்க ஒன்றியம், தொழில் ஆணையாளர்களின் சங்கம், கல்வி நிர்வாக சேவை தொழிற்சங்க ஒன்றியம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் பலி

ரணில் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் : அமைச்சர் மனுஷ

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய சபைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை

editor