வகைப்படுத்தப்படாத

தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்கள் ஆதரவு…

(UDHAYAM, COLOMBO) – நாளை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவே நாளையதினம் நாடளாவிய ரீதியில் தொழில் சங்க போராட்டத்தை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும் தாம் இந்த தொழிற்சங்க போராட்டத்தை எதிர்ப்பதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தேசிய சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை கலைப்பது உள்ளிட்ட மேலும் 2 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளையதினம் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க உள்ளது.

Related posts

Former Rakna Lanka Chairman remanded

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி!

பிணை முறி, ஊழல் மோசடி பற்றிய ஆணைக்குழுக்களில் அறிக்கைகள் சபையில்