உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய சம்பவம் – சற்றுமுன் மூவர் கைது

மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலையில் அமைத்த தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர், அடங்கலாக தாந்தாமலை RDS தலைவர், பிரதேச சபை உத்தியோகத்தர், என மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்றைய தினம் இரவு 10.00 மணியளவில் (25 ) இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னனி துணை செயலாளர் சட்டத்தரணி அ.நிதான்சன் , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மட்டக்களப்பு மாநகர சபை பிரதி முதல்வர் வை. தினேஷ்குமார், மண்முனை தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் இ.கிரேஷகுமாரன், , மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் முதல்வர் தி. சரவணபவன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் எனப்பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகை தந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

-ஸோபிதன் சதானந்தம்

Related posts

அவுஸ்திரேலியா, சிட்னி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஜனாதிபதி அநுரவின் இரங்கல் செய்தி

editor

மார்ச் முதலாம் திகதி பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டம்

நாளை தினத்திற்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு