உள்நாடுசூடான செய்திகள் 1

தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கும் பேரிழப்பு

(UTV | கொழும்பு) – காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் இந்தியத் தூதுவரை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்த செய்தியை கேள்விப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, தொண்டமானின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்தார்.

அங்கு ஊடகவியளாளருக்கு  கருத்து தெரிவிக்கையில், ஆறுமுகன் தொண்டமானின்
மறைவு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

Related posts

சஜித் – அநுரவின் கல்வித் தகைமையை வெளிப்படுத்துமாறு கோரிக்கை!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணி